top of page

கல்லும், முள்ளுமாக இருந்த நிலத்தை கூராக்கி விவசாய நிலமாக்கியவர்கள், சண்முகா நதியின் நீர் வளத்தை முழுமையாக பயன்படுத்தும் அளவிற்கு நீர் மேலாண்மை செய்த அறிவிற்குச் சொந்தக்காரர்களாக இருந்தபோதும், இன்று வாழ்ந்த சுவடுகளை மறந்து, உரிமைகளை இழந்து, அடிமைத் தொழில் செய்யும் நிலையில் வாழ்ந்து வருகிறார்கள். பூர்வகுடிகளில் யாருக்கும் இந்தவூரில் ஒரு காணி நிலம்கூட இல்லாதிருந்த சூழல்தான் அது. அப்போது பள்ளிக்கூடம் என்பதெல்லாம் மேல்சாதிக்காரர்களுக்கு மட்டுமே வாய்த்திருந்தது. எந்த தோட்டத்தில் பார்த்தாலும் அங்கு வேலைகளிலிருந்து கடினமான விவசாய எல்லாத் தொழில்களிலும் முறைசாராத சம்பளத்தில் இந்த பூர்வகுடி மக்களை வேலைக்கு வைத்திருப்பார்கள். சிலருக்கு தினக் கூலியாக இருக்கும். சிலருக்கு வருடக்கூலியாக இருக்கும், இன்னும் சிவருக்கோ கூலியே கொடுக்காது சாப்பாடு போடறதுதான் அவங்க உழைப்பிற்கான சம்பளமாக இருக்கும். இன்னும் குறிப்பாக சாதியத் தீட்டு என்பது அப்போது கீழ்சாதிக்காரரின் உழைப்பிலும் அவர்களின் உழைப்பிலும் விளைந்த பொருட்களிலும் இல்லை என்று கருதிய காலம்.

Kudakkoothu by Udhaya Bala

RM40.00Price
  • Estimated delivery 2-3 weeks

bottom of page