போகன் சங்கரின் ஒவ்வொரு சிறிய கவிதையிலும் புதிய அறிதல் ஒன்று நிகழ்கிறது. இந்த அறிதலை கண்டுபிடித்தல் என்றோ, தரிசனம் என்றோ சொல்லலாம். தரிசனமற்ற அழகுணர்சசிககு எதிரானது இதன் அழகியல், தொடர்ந்து தன்னை அகமாற்றத்திற்கு உட்படுத்திக்கொள்ளும் கவிதைகள் இவருடையவை, தொடாநது தன்னை உடைத்துக்கொள்ளும் அகம் தன்னை தொடர்ந்து தொகுத்துக்கொள்வதும் ஆகிறது கவிதையில் போகன் ஒரு உண்மையைக் கண்டடைந்தவுடன் தானே அதன் மறு உண்மையை நோக்கி நடக்கத் தொடங்குகிறார் ஒரே கவிதையில்கூட சமயங்களில் இரு வேறு உண்மைகள் நிகழ்கின்றன. கவிஞனுக்கு இவ்வாறான அகம் வாய்ப்பது சிறப்பானது. ஒவ்வொரு கவிஞனுக்கும் தன்னை முழுமையாக முன்வைக்கும் தொகுப்பென ஒன்று அமையும் அது முன்னுக்கும் பின்னுக்கும் என வளரக்கூடியது. போகன் ஏற்கனவே வாசகர்களால் நன்கு அறியப்பட்டவர் என்றாலும்கூட, இத்தொகுப்பு அவ்வாறாக அமையும் என நினைக்கிறேன்.
Kulam Pol Nadikkum Kadal by Bogan Shankar
Estimated delivery 2-3 weeks
