top of page

கி.வா.ஜ. என்று தமிழ் கூறும் நல்லுலகில் மதிப்புடனும் மரியாதை கி.வா.ஜ. என்று தமிழ் யுடனும் அழைக்கப்பெறும் கி.வா. ஜகந்நாதன் 1906-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் பதினொன்றாம் நாள் பிறந்தார். அவரது தந்தையார் பெயர் வாசுதேவ ஐயர்; தாயார் பெயர் பார்வதி அம்மாள் ஆவார். 1927-ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கி.வா.ஜ. உ.வே.சாவிடம் தமிழ் கற்க மாணவராகச் சேர்ந்தார். நீண்ட காலம் உ.வே.சா.விடம் கல்வி பயின்று, பதிப்பு முறைகளை முற்றும் தெரிந்து கொண்டார் கி.வா.ஜ. 1928-ஆம் ஆண்டு முதல் 1942இல் உ.வே.சா. இம்மண்ணுலகை விட்டுச் செல்லும் நாள்வரை, அவருடைய கட்டளைகளை ஏற்றுச் செயல்பட்டு வந்தார் கி.வா.ஜ. 1988-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நான்காம் நாள் தம் வாழ்வை நிறைவு செய்து கொண்டார். கி.வா.ஜ. அவர்கள். கி.வா.ஜ. அவர்கள் மறைந்த பிறகு அவரது நூல்களை நாட்டுடமை ஆக்கிய பெருமை டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அரசை சாரும். இது கி.வா.ஜ. அவர்களின் தமிழ்த் தொண்டிற்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டது தமிழக அரசு.

Malai Aruvi by Jagannathan

RM51.00Price
  • Estimated delivery 2-3 weeks

Follow Us

  • Facebook
  • Instagram
  • Threads
  • TikTok

Sign up for our newsletter

© 2024 by The Book Box.

bottom of page