ஸ்பெக்ட்ரம் ஊழல் கலர் கலராக ஆடும் இன்றைய காலகட்டத்தில், 'காமராஜரைப் போல ஒரு அரசியல்வாதி மீண்டும் பிறந்து நாட்டைச சீர்திருத்த மாட்டாரா' என ஏக்கத்துடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் மக்கள்.. காரணம் மக்கள்நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாக்க் கொண்டு வாழ்ந்த நேர்மையான அரசியல் துறவி அவர்.
தன் தங்கையின் பேரன், நல்ல மார்க் எடுத்து மெடிகல் கவுன்சிலுக்குத் தகுதி பெற்றும், அவரை மருத்துவக் கல்ல்லூரிக்குப் பரிந்துரைக்காமல், கோவை விவசாயக் கல்லூரிக்குப் போகச்சொல்லி அறிவுறுத்தியிருக்கிறார் காமராஜர்!
இதுபோன்ற, மனதை ஈருக்கும் சம்பவங்கள் மக்களைக் கவர்ந்ததாலேயே அவர் 'பெருந்தலைவர்' என்று அழைக்கபட்டார்.
காமராஜரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை, ஆவணங்களின் உதவியுடன் உறுதி செய்துகொண்டு, சுவைபட எழுதியிருக்கிறார் நூலாசிரியர் எஸ்.கே. முருகன்.
Perunthalaivar Kamarajar by S K Murugan
Estimated delivery 2-3 weeks