top of page

வன்மமும் கோபமும் மனிதர்களின் மனதில் காலந் தோறும் கலந்தே வந்துகொண்டிருக்கிறது. வன்முறையைக் கையிலெடுத்தவர்களின் வாழ்க்கைச் சூழல் வன்முறை நிறைந்ததாகவே இருக்கும். அப்படிப்பட்ட வன்முறை மனிதர்கள் உலா வருகிறார்கள் இந்த வேட்டை நாய்கள் நாவலில். தூத்துக்குடியையும் அதன் துறைமுகத்தையும் கதைக் களமாகக் கொண்டு புனையப்பட்டுள்ள இந்த நாவல், இரண்டு சகோதரர்களையும் அவர்கள் ஏவும் வேலையை ஏனென்று கேட்காமல் செய்து முடிக்கும் இரண்டு அடியாள்களைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை மையப்படுத்தி செல்கிறது. 

 

முதல் பாகத்தில், தூத்துக்குடி துறைமுக அதிகாரத்தை யார் கைப்பற்றுவது என்பதில் தொடங்கியது. இதில் இறுதியாக தூத்துக்குடி துறைமுகத்தை யார் கைப்பற்றியது என்பதையும் அதற்காக இரண்டு தரப்பைச் சேர்ந்தவர்களின் பழிவாங்கல், கடத்தல் என தன் விறுவிறுப்பான எழுத்து நடையில் தந்திருக்கிறார் நரன். 

 

முதல் பாகத்தில் பெரிய பர்லாந்தின் ஏவல் ஆளாக இருந்த சமுத்திரம் இடத்தில் இரண்டாம் பாகத்தில் ஜான் என்பவன் நிறுத்தப்படுகிறான். ஜான், கொடிமரம் இடையே நடக்கும் மோதலில் யார் வென்றது என்பதை பல திருப்பங்களுடன் சொல்லி முடித்திருக்கிறார் நரன். முதல் பாகத்தின் விறுவிறுப்பு இரண்டாம் பாகத்திலும் சற்றும் குறைவில்லாமல் இருப்பது வாசகர்களை வசீகரிக்கும். பகையுணர்ச்சி கொண்டு அலையும் வேட்டை நாய்களின் வேட்டைக் களத்தை இனி காணலாம்.

Vettai Naaigal Part 1 by Naran

RM60.00Price
Quantity
  • Estimated delivery 2-3 weeks

Follow Us

  • Facebook
  • Instagram
  • Threads
  • TikTok

Sign up for our newsletter

© 2025 by The Book Box.

bottom of page