top of page

விஷ்ணுபுரம் ஒரு காவிய நாவல், தன்னை ஒரு காவியமாக கட்டமைத்துக்கொண்டு, தன்னை எழுதும் பொறுப்பை தானே எடுத்துக் கொண்ட படைப்பு. ஆகவே, இதில் எல்லாத் தரப்புகளும் பேசப்படுகின்றன, வலியுறுத்தப்படுவது என்று ஏதுமில்லை. அனைத்தும் ஆராயப்படுகின்றன. விஷ்ணுபுரம் ஒரு கனவு, கனவுகள் வசீகரமானவை. இந்நாவலின் ஈர்ப்புக்குக் காரணம் அதுவே. அதே சமயம் கனவுகளில் முற்றிலும் இனியவை என்று ஏதுமில்லை, கனவுகள் நம்மை நமக்குக் காட்டுபவை. நம்மை நிலைகுலையச் செய்பவை. நாம் நமது தர்க்கபுத்தியால் எத்தனை தூரம் சென்றாலும் எவ்வளவு சுருக்கி வகைப்படுத்தினாலும் அளந்துவிட முடியாதவை. விஷ்ணுபுரம் வாசிப்புக்கு ஓர் அறைகூவலை விடுப்பது, அந்த அறைகூவலைச் சந்திக்கும் வாசகன் அதை உள்வாங்கும் பொருட்டு தன்னை விரிக்கிறாள். நெகிழ்த்திக்கொள்கிறான். மாற்றியமைக்கிறான். அதன் வழியாகவே அவனுடன் நாவல் உரையாடுகிறது. நாவலின் ஓட்டம் அல்ல, அது அளிக்கும் தடையே வாசகனைக் கட்டமைக்கிறதென்பதை விஷ்ணுபுரத்தை வாசிப்பவர்கள் உணரக்கூடும். – ஜெயமோகன்

Vishnupuram by Jeyamohan

RM125.00Price
  • Estimated delivery 2-3 weeks

bottom of page